[Advaita-l] A verse of Shivananda lahari 47 in Tamil

V Subrahmanian v.subrahmanian at gmail.com
Wed Nov 21 20:58:16 EST 2018


Here is a verse from Shankara's Shivanandalahari composed in Tamil and
rendered in keerthana style:


https://www.facebook.com/photo.php?fbid=1159413460878518&set=a.165183606968180&type=3&theater

சிவத்தியானம் எனும் வசந்தம் வந்து கூடவும்
இதயமலர்ச் சோலையில்
பாபமாகிற பழுத்த இலைகள் உதிர்கின்றன.
பக்திக்கொடிகள் அழகுற மிளிர்கின்றன.
புண்ணியத்தின் தளிர்கள் தோன்றுகின்றன.
குணங்களெனும் அரும்புகளும்
ஜபமந்திரங்களாம் பூக்களும்
நன்மையெனும் நறுமணமும்
ஞான ஆனந்த அமுதத் தேனின் பெருக்கும்
அனுபூதியெனும் கனியின் உயர்வும்
பிரகாசிக்கின்றன.

- சிவானந்த லஹரி 47 (ஸ்ரீ சங்கரர்)

शंभु-ध्यान-वसन्त-संगिनि हृदारामे-अघ-जीर्णच्छदाः
स्रस्ता भक्ति लताच्छटा विलसिताः पुण्य-प्रवाल-श्रिताः ।
दीप्यन्ते गुण-कोरका जप-वचः पुष्पाणि सद्वासना
ज्ञानानन्द-सुधा-मरन्द-लहरी संवित्फलाभ्युन्नतिः ।।47।।

(மீள்பதிவு. முதற்பதிவு : November 20, 2017)

எனது இப்பதிவைத் தொடர்ந்து முனைவர்Natesan Muthukumaraswamy
<https://www.facebook.com/natesan.muthukumaraswamy?__tn__=%2CdK%2AF-R&eid=ARBrDQ3zoHejybLMPf7chsQvmuq7JF2HUc8X_KIuzc3d9Br7EHTPbtuA76sXtamL8XDnp5Jqqn6bx72B>
ஐயா,
இந்த சுலோகத்தின் கருத்தை அமைத்து கீழ்க்கண்ட அழகிய கீர்த்தனையை இயற்றி அடுத்த
நாள் தனது சுவரில் பதிந்திருந்தார்.

இராகம் – வசந்தா, தாளம் - ரூபகம்

பல்லவி

வந்தது சம்பு வசந்தத் தியானம்
வளம் படைத்தது மன உத்யானம் (வந்)

அநுபல்லவி

முந்தைப் பாவப் பழுப்புதிர்ந்தன
மொய்த்தற மென்னும் முரி எழுந்தன (வந்)

சரணம்

அன்புக் கொடிகள் குணமரும்பின
அரன்பெயர் மலர்ந்தன நல்வாசனை
இன்பம் அறிவோடு அமுத வெள்ளம்
எழுந்து சிவமாம் பலம் விளைந்தது (வந்)

[முரி- தளிர்].

(இக்கீர்த்தனை சங்கராச்சாரிய சுவாமிகளின் சிவானந்தலகரி 47ஆவது சுலோகத்தைத்
தழுவியது).

Rendered by the composer himself in his voice:

 https://m.soundcloud.com/user725394901/z0000040
<https://m.soundcloud.com/user725394901/z0000040?fbclid=IwAR3_CRF4Aw4PVF0POK3wyIWlGHcX5gHGAqOtZ91NaPkR_B1VatYSRWPnnZU>


regards
subbu


More information about the Advaita-l mailing list